22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் - ரபேல் நடாலின் சாதனைப் பயணம்

22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் - ரபேல் நடாலின் சாதனைப் பயணம்
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் - ரபேல் நடாலின் சாதனைப் பயணம்

14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் ரபேல் நடால். இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2022 இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 14வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் ரபேல் நடால். அத்துடன், இது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

ரபேல் நடால் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளின் முழு பட்டியல் இதோ..

* பிரெஞ்சு ஓபன் 2005 தொடரில் 6–7, 6–3, 6–1, 7–5 என்ற செட் கணக்கில் மரியானோ புவேர்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2006 தொடரில் 1–6, 6–1, 6–4, 7–6 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ரபேல் நடால்.

* விம்பிள்டன் 2006 தொடரில் 0–6, 6–7, 7–6, 3–6 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரிடம் வீழ்ந்தார் ரபேல் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2007 தொடரில் 6–3, 4–6, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.  

* விம்பிள்டன் 2007 தொடரில் 6-7, 6-4, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார் ரபேல் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2008 மற்றும் விம்பிள்டன் 2008 தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்.

* ஆஸ்திரேலியன் ஓபன் 2009 தொடரில் 7-5, 3-6, 7-6, 3-6 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2010, விம்பிள்டன் 2010, அமெரிக்க  ஓபன் 2010 ஆகிய  தொடர்களில்  சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2011 தொடரில் 7–5, 7–6, 5–7, 6–1 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.  

* விம்பிள்டன் 2011 மற்றும் அமெரிக்க  ஓபன் 2011 தொடர்களில்  நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார் நடால்.

* ஆஸ்திரேலியன் ஓபன் 2012 தொடரில் 7-5, 4-6, 2-6, 7-6, 5-7 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2012 தொடரில் 6–4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ரபேல் நடால்.

* பிரெஞ்சு ஓபன்  2013 மற்றும் அமெரிக்க  ஓபன் 2013 தொடர்களில்  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் நடால்.

* ஆஸ்திரேலியன் ஓபன் 2014 தொடரில்  3–6, 2–6, 6–3, 3–6 என்ற செட் கணக்கில் ஸ்டான் வாவ்ரிங்காவிடம் தோல்வியடைந்தார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2014 தொடரில் 3–6, 7–5, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ரபேல் நடால்.

* ஆஸ்திரேலியன் ஓபன் 2017 தொடரில்  4-6, 6-3, 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2017 மற்றும் அமெரிக்க  ஓபன் 2017 தொடர்களில்  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2018 தொடரில் 6–4, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் ரபேல் நடால்.

* ஆஸ்திரேலியன் ஓபன் 2019 தொடரில்  3–6, 2–6, 3–6 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2019 மற்றும் அமெரிக்க  ஓபன் 2019 தொடர்களில்  சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2020 தொடரில் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.

* ஆஸ்திரேலியன் ஓபன் 2022 தொடரில் 2-6, 6–7, 6–4, 6–4, 7-5 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் நடால்.

* பிரெஞ்சு ஓபன் 2022 தொடரில் 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com