\
உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி அசத்தல்

உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி அசத்தல்

உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பிரான்ஸ் அணி அசத்தல்
Published on

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஃபிரான்ஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இன்றைய முதல் ஆட்டத்தில் மோதின. போட்டி தொடங்கிய முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் வெற்றிபெற இரு அணியினரும் முனைப்பு காட்டியதால் போட்டி விறுவிறுப்படைந்தது. 

போட்டியில் 58வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மேன்(Griezmann) தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். அதனை தொடர்ந்து 62வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஜெடிநாக்(Jedinak) பதில் கோல் அடித்ததால் போட்டி சமநிலை பெற்றது. பின்னர் பிரான்ஸ் வீரர் போக்பா (Pogba) 80வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com