பிரான்ஸ் vs அர்ஜென்டினா.. நேருக்கு நேர் - இதுவரை உலகக்கோப்பைகளில் நடந்தது என்ன?

பிரான்ஸ் vs அர்ஜென்டினா.. நேருக்கு நேர் - இதுவரை உலகக்கோப்பைகளில் நடந்தது என்ன?
பிரான்ஸ் vs அர்ஜென்டினா.. நேருக்கு நேர் - இதுவரை உலகக்கோப்பைகளில் நடந்தது என்ன?

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டுதான் கால்பந்து. கால்பந்து தொடர்களில் உச்சபட்ட போட்டியான உலகக்கோப்பை தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன. இதற்கு முன் அறை இறுதியில் கால்பந்து நாயகன் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி குரோஷியாவை 3 - 0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதனையடுத்து பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்பேட்டிக்கு தேர்வானது. இந்த போட்டி நாளை இரவு 8:30 IST மணி லுசைல் மைதானத்தில் நடக்க உள்ளது.

"Argentina Vs France" நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ!

இதற்கு முன் 1930, 1978, 2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பைகளில் மூன்று முறை பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா மோதி உள்ளன.
இதற்கு முன் ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் எம்பாப்பேவின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் 4-3 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றிப்பெற்றது.

பிரான்ஸ் vs அர்ஜென்டினா நேருக்கு நேர்: 12 போட்டிகள் (மொத்தமாக)

பிரான்ஸ் வென்ற போட்டிகள் - 3
அர்ஜென்டினா வென்ற போட்டிகள் - 6
போட்டிகள் டிராவில் முடிந்தது - 3

பிரான்ஸ் vs அர்ஜென்டினா நேருக்கு நேர்: 3 போட்டிகள் (உலகக்கோப்பையில் மட்டும்)

பிரான்ஸ் வென்ற போட்டிகள் - 1
அர்ஜென்டினா வென்ற போட்டிகள் - 2
போட்டிகள் டிராவில் முடிந்தது - 0

இது லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பையாக உள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன. கிரீஸ்மேன் மற்றும் எம்பாப்பே வின் அசத்தலான ஆட்டம் காரணமாக இந்தாண்டு பிரான்ஸ்க்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

- சுஹைல் பாஷா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com