அடுத்தடுத்து 2 கோல் அடித்த அர்ஜென்டினா; பைனலில் மோசமான ரெக்கார்டை உடைத்தார் மெஸ்ஸி!

அடுத்தடுத்து 2 கோல் அடித்த அர்ஜென்டினா; பைனலில் மோசமான ரெக்கார்டை உடைத்தார் மெஸ்ஸி!
அடுத்தடுத்து 2 கோல் அடித்த அர்ஜென்டினா; பைனலில் மோசமான ரெக்கார்டை உடைத்தார் மெஸ்ஸி!

பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கிடையேயான பைனலில், இதுவரை இறுதிப்போட்டியில் கோலே அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை உடைத்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.

பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப்பட்டு இருக்கும் கத்தார் 2022 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கிடையே 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இறுதிப்போட்டியில் முதல் கோலை பதிவு செய்த மெஸ்ஸி!

இந்நிலையில் போட்டி தொடங்கிய 23ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லியோனல் மெஸ்ஸி, அபாரமான ஒரு கோலை பதிவு செய்து, இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணிக்காக கோல் கணக்கை தொடங்கியுள்ளார்.

இதன் மூலம் இதுவரை பலசாதனைகளை படைத்திருந்தாலும், இறுதிப்போட்டியில் கோலே அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை உடைத்திருக்கிறார் மெஸ்ஸி.

2014 உலகக்கோப்பை - 2022 உலகக்கோப்பை

2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜெர்மனி அணிக்கு எதிராக அர்ஜெண்டினா ஒருகோல் கூட அடிக்காத நிலையில், 113ஆவது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு கோலை பதிவுசெய்து கோப்பையை தட்டிச்செல்லும்.

2014ல் கேப்டனாக இருந்த போதும், ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை மெஸ்ஸி. இந்நிலையில் 2022ல் கேப்டனாக பங்குபெற்று விளையாடும் மெஸ்ஸி தனது மோசமான ரெக்கார்டை உடைத்துள்ளார்.

2-0 என அர்ஜெண்டினா முன்னிலை!

போட்டியின் 23ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றிய நிலையில், 36ஆவது நிமிடத்தில் டி மரியா மற்றொரு கோலை பதிவு செய்து, 2-0 என முன்னிலை பெற்று ஆடிவருகிறது அர்ஜெண்டினா அணி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com