கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? மிரண்டு போன ரசிகர்கள் !

கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? மிரண்டு போன ரசிகர்கள் !

கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? மிரண்டு போன ரசிகர்கள் !
Published on

இன்றிரவு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியை உலகமே ஆவலுடன் உற்றுநோக்கியுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு, 2வதாக வரும் அணிக்கு எவ்வளவு பரிசு என்ற தகவல்கள் அச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 260 கோடி ரூபாய் பரிசாக தரப்படும் என ஃபிஃபா தெரிவித்துள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணி 192 கோடி ரூபாய் பரிசு மழையில் நனைய உள்ளது. 3வது இடம் பிடித்த பெல்ஜியம் அணி 164 கோடி ரூபாய் பரிசு பெற உள்ளது. 4வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும். காலிறுதியில் இடம் பிடித்த அணிகளுக்கு 110 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது. 2வது சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் தலா 82 கோடி ரூபாயும் முதல் சுற்றில் ஆடிய அணிகளுக்கு தலா 55 கோடி ரூபாயும் வழங்கப்படும் என ஃபிஃபா தெரிவித்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக 2018 உலகக்கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் பரிசுத் தொகையாக மட்டும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. கடந்த முறை பிரேசிலில் உலகக்கோப்பை போட்டி நடந்த போது வழங்கப்பட்டதை விட தற்போது பரிசுத்தொகை 40% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது. ஃபிஃபா தரும் பரிசுப் பணத்தை 32 நாட்டு அணிகளும் வெவ்வேறு விகிதங்களில் தங்கள் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும். இதன் படி அந்தந்த நாட்டு கால்பந்து சங்கங்கள் தங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்ளும். உலகளவில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு அடுத்தபடியாக அதிக பரிசுத் தொகை கொண்ட விளையாட்டுத் தொடராக உலகக் கோப்பை கால்பந்து கருதப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com