பிரான்சில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் சாஸ் டேவிஸ் வெற்றி பெற்றார்.
மோட்டார் சைக்கிள் போட்டியில், டேவிஸ் நான்காவது இடத்தில் இருந்து வாகனத்தை இயக்கினார். மேலும் சகநாட்டு வீரரான அலெக்ஸ் லோவெஸ், நெதர்லாந்தின் மிச்செல் வான்டிர் மார்க் ஆகியோரின் சவாலை முறிடியத்து, சாஸ் டேவிஸ் முதலிடத்தைப் பிடித்தார். உலகச் சாம்பியனான பிரிட்டனின் ஜோனாதன் ரியா, வாகன பழுது காரணைமாக கடைசி நேரத்தில் இந்தப் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.