அதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்

அதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்
அதிர்ச்சியில் உறைந்த அர்ஜென்டினா ரசிகர்கள் - கோல் மழை பொழிந்த பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியை 3-4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. 

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. நாக் அவுட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி போராடி தோல்வியுற்று நடையை கட்டியது.

போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளின் வீரர்களும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக விளையாடினர். ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை போட்டது. அதனையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க நீண்ட நேரம் போராடின. 41வது நிமிடத்தில் அர்ஜெண்டினா ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் போட்டி 1-1 என்று சமன் ஆனது. 

அதனையடுத்து, இரண்டாவது பாதி தொடங்கிய வேகத்தில் அர்ஜெண்டினா 48', பிரான்ஸ் 57'வது நிமிடங்களில் கோல் அடிக்க போட்டி மீண்டும் விறுவிறுப்பை எட்டியது. அதன்பின்னர் ஆட்டம் பிரான்ஸ் வீரர்களின் கைக்குள் சென்றது. ஆக்ரோசமாக விளையாடி பிரான்ஸ் வீரர்கள் 64', 68' ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இறுதிவரை போராடியும் அர்ஜெண்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இருப்பினும், கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினா ஒரு கோல் அடித்தது. இறுதியில் அர்ஜெண்டினா 3-4 கோல் கணக்கில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

அசத்தலாக கோல் மழை பொழிந்த பிரான்ஸ் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததால் மெஸ்சி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லீக் சுற்றிலே வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா, நைஜிரியாவை வீழ்த்தி போராடி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், எல்லா எதிர்பார்ப்புகளும் தற்போது புஷ்வானம் போல் ஆகிவிட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com