\
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள்

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள்

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள்
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் புதிதாக நான்கு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில், ஏற்கனவே 12 அணிகள் உள்ளன. இதோடு இப்போது ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய நான்கு அணிகள் புதிதாகச் சேர்க்கப்படுகின்றன. 

ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியலில் இணைய குறைந்தது இவ்வளவு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன் அடிப்படையில் இன்னும் 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய பிறகு நெதர்லாந்து, நேபாள அணிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெறும். 

இந்த அணிகள் சேர்க்கப்பட்டிருப்பதால் இவற்றுடன் ஆடும் ஒருநாள் போட்டிகளும் இனி தரவரிசைப் புள்ளிகள் கணக்கீட்டில் சேர்த்து கொள்ளப்படும். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உள்ள அணிகள் விவரம்: 

1. இங்கிலாந்து (125 புள்ளிகள்), 2. இந்தியா (122), 3. தென் ஆப்பிரிக்கா (113), 4. நியூஸிலாந்து (112), 5. ஆஸ்திரேலியா (104), 6. பாகிஸ்தான் (102), 7. பங்களாதேஷ் (93), 8. இலங்கை (77), 9. மே.இ.தீவுகள் (69), 10. ஆப்கானிஸ்தான் (63), 11. ஜிம்பாப்வே (55), 12. அயர்லாந்து (38), 13. ஸ்காட்லாந்து (28), 14. யு.ஏ.இ. (18)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com