\
ஃபார்முலா ஒன் கார் பந்தயம் - பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி

ஃபார்முலா ஒன் கார் பந்தயம் - பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி

ஃபார்முலா ஒன் கார் பந்தயம் - பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி
Published on

இத்தாலியில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

இத்தாலியில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றார். மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த ஹாமில்டன், 307 கிலோ மீட்டர் பந்தய இலக்கை 1 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார். இதனால் அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலிலும், ஹாமில்டன் முதலிடத்திற்கு முன்னேறினார். இது, இந்த சீசனில் அவர் பதிவு செய்த 6-வது வெற்றி ஆகும். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல், 235 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நடப்பு ஆண்டிற்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயம், உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. 14-வது சுற்றுப் பந்தயம், சிங்கப்பூரில் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com