டிரெஸ்ஸிங் ரூமில் இரண்டாக பிரிந்திருக்கும் இந்திய அணி: முன்னாள் பாக். வீரர் டேனிஷ் கனேரியா
இந்திய கிரிக்கெட் அணி டிரஸ்ஸிங் ரூமில் இரண்டு குழுக்களாக பிரிந்திருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா. இந்த குற்றச்சாட்டை விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து முன்வைத்துள்ளார் அவர். இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது அணி இரண்டாக பிளவுப்பட்டு இருப்பதாக ஊகங்களின் அடிப்படையில் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிப்பது உண்டு. அந்த வகையில் டேனிஷ் கனேரியாவும் இதனை சொல்லியுள்ளார்.
“இந்திய அணி இரண்டாக பிரிந்திருப்பதை போல தெரிகிறது. அது கோலி மற்றும் ராகுலாக இருக்கலாம். ஆனால் இதனை கோலி விரும்பமாட்டார். ஏனெனில் அவர் அணியாக இணைந்து விளையாடவே அதிகம் விரும்புபவர். அதனால் நிச்சயம் வலுவாக கம்பேக் கொடுப்பார்.
டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்போடு களம் இறங்கியது. ஆனால் கேப்டன் ராகுலிடம் ஸ்பார்க் இல்லை. தென்னாப்பிரிக்க அணியின் பார்ட்னர்ஷிப்பை தனது பவுலர்களை வைத்து அவரால் தகர்க்க முடியவில்லை” என தனது யூடியூப் சேனலில் சொல்லி உள்ளார் அவர்.