\
“அந்த பையனுக்கு பயம் இல்ல” - ரிஷப் பண்டை புகழ்ந்த இன்சமாம்-உல்-ஹாக்!

“அந்த பையனுக்கு பயம் இல்ல” - ரிஷப் பண்டை புகழ்ந்த இன்சமாம்-உல்-ஹாக்!

“அந்த பையனுக்கு பயம் இல்ல” - ரிஷப் பண்டை புகழ்ந்த இன்சமாம்-உல்-ஹாக்!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை புகழ்ந்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக். பண்ட் இடது கையில் விளையாடும் ஷேவாக். அந்த பையனுக்கு அறவே பயம் இல்லை எனவும் இன்சமாம் தெரிவித்துள்ளார். 

அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பண்ட் நெருக்கடியான சமயத்தில் சதம் விளாசினார். அதையடுத்து அவரை பல்வேறு கிரிக்கெட் அணிகளின் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்டில் இன்சமாமும் இணைந்துள்ளார். 

“நீண்ட நாளுக்கு பிறகு ஆட்டத்தின் நெருக்கடி எல்லாம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என சொல்லி விளையாடும் வீரரின் ஆட்டத்தை பார்க்க முடிந்தது. ஆறு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய அவரது ஆட்டம் வேற லெவல். ஆடுகளம், எதிரணியின் பந்துவீச்சு என எதையும் கண்டு அஞ்சாத அஞ்சான். இயல்பான ஆட்டத்தை ஆடி அசத்தினார்.

ஃபீல்டர்கள் பவுண்டரி லைனில் நிற்க  வைத்தபோதும் தனது அதிரடியை தொடர்ந்தார். அவரது ஆட்டத்தை நான் ரசித்தேன். அந்த பையனுக்கு பயம் இல்ல. இடது கையால் பேட்டிங் செய்யும் ஷேவாக்போல இருந்தது அவரது ஆட்டம்” என பண்ட் குறித்து தெரிவித்துள்ளார் இன்சமாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com