'நான் தன்பாலின ஈர்ப்பாளர்தான்' - வெளிப்படையாக அறிவித்த முன்னாள் நியூசி. கிரிக்கெட் வீரர்!

'நான் தன்பாலின ஈர்ப்பாளர்தான்' - வெளிப்படையாக அறிவித்த முன்னாள் நியூசி. கிரிக்கெட் வீரர்!
'நான் தன்பாலின ஈர்ப்பாளர்தான்' - வெளிப்படையாக அறிவித்த முன்னாள் நியூசி. கிரிக்கெட் வீரர்!

நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் டேவிஸ், தாம் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

சமீபகாலமாக தன்பாலின ஈர்ப்பு கொண்ட விளையாட்டு வீரர்கள் பலரும், தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான் என்பதை பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர். இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் தன்பாலின ஈர்ப்பாளர் என்று அறிவித்துக்கொண்ட வீரர் என்பது அரிதாகவே கேள்விப்பட முடிகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவன் டேவிஸ், கடந்த 2011இல் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை ஒத்துக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட முதல் வீரராக அவரே உள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் டேவிஸ், தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டாவது வீரராக ஹீத் டேவிஸ் உள்ளார்.

இதுகுறித்து ஹீத் டேவிஸ் கூறுகையில், “என் வாழ்க்கையின் இந்தப் பகுதியை நான் மறைத்து வைத்திருப்பதாக உணர்ந்தேன். நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை மற்றவர்களிடம் வெளிப்படுத்த விரும்பினேன். அதை மறைப்பதால் நான் நோய்வாய்ப்பட்டேன். ஆக்லாந்தில் உள்ள அனைவருக்கும் நான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பது தெரியும், ஆனால் அது பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. நான் சுதந்திரமாக உணர்ந்தேன்" என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: LinkedIn பயனர்களின் விவரங்களை திருடும் வட கொரிய ஹேக்கர்கள்? - எச்சரிக்கும் USA நிபுணர்கள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com