“நான் கிரிக்கெட் விளையாடி இருந்தால்..” - என்ன சொன்னார் தெரியுமா கிறிஸ்டியன் வியரி?

“நான் கிரிக்கெட் விளையாடி இருந்தால்..” - என்ன சொன்னார் தெரியுமா கிறிஸ்டியன் வியரி?

“நான் கிரிக்கெட் விளையாடி இருந்தால்..” - என்ன சொன்னார் தெரியுமா கிறிஸ்டியன் வியரி?
Published on

இத்தாலி அணிக்காக 1997 முதல் 2005 வரை சர்வதேச காலபந்தாட்ட போட்டிகளில் விளையாடியவர் கிறிஸ்டியன் வியரி. 49 சர்வதேச போட்டிகளில் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார் அவர்.

கால்பந்தாட்டத்தில் ஃபார்வேர்ட் பொசிஷனில் விளையாடும்  அவர், நான் மட்டும்  கிரிக்கெட் விளையாடி இருந்தால் சிறந்த பேட்ஸ்மேனாகி இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பான ஐசிசி பகிர்ந்துள்ளது. 

“ஆஸ்திரேலியாவில் பத்து ஆண்டு காலம் இருந்தவன் நான். எனது 4 வயது தொடங்கி 14 வயது வரையிலான பால்ய காலம் அங்கு தான் கடந்தது. எல்லா குழந்தைகளையும்போல பள்ளிக்கு செல்வது, ஃபுட்பால் விளையாடுவது, கிரிக்கெட் விளையாடுவது என அப்போது சகல கலா விளையாட்டு வீரனாக இருந்தேன். கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய ரசிகன் நான்.  

சிட்னியில் ஆஸ்திரேலியா விளையாடிய சர்வதேச போட்டிகளை பார்த்துள்ளேன். கிரிக்கெட்டில் நான் கிறிஸ் கெயில் மாதிரி. அதிரடி, சரவெடி பேட்ஸ்மேன். அதே நேரத்தில் ஃபீல்டிங், பவுலிங் என எல்லா டிபார்ட்மெண்டிலும் கலந்துகட்டி அடிக்கும் ஆல் ரவுண்டர். நான் கிரிக்கெட் விளையாடி இருந்தால் சிறந்த பேட்ஸ்மேனாகி இருப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

இத்தாலி அணிக்காக 1998 மற்றும் 2002 கால்பந்தாட்ட உலகக் கோப்பையில் கிறிஸ்டியன் வியரி விளையாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com