மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டுடன் உள்ள போட்டோவை பகிர்ந்த யுவராஜ் சிங்!

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டுடன் உள்ள போட்டோவை பகிர்ந்த யுவராஜ் சிங்!

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டுடன் உள்ள போட்டோவை பகிர்ந்த யுவராஜ் சிங்!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கால்பந்தாட்ட கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டுடன் உள்ள போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் யுவராஜ். 

வழக்கமாக ஆட்டத்தில் கோல் அடித்ததும் ஜெஸ்ஸி லிங்கார்ட், தனது விரல்களை மடக்கி ஒரு விதமான டிரேட்மார்க் முத்திரையை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அது 'JLingz' கொண்டாட்டம் என சொல்வது உண்டு. இருவரும் அந்த போட்டோவில் 'JLingz' முத்திரையை காட்டுகின்றனர். 

“எதிர்வரும் சீசன் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்” என யுவராஜ் அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். 

20 ஆண்டுகளாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர் என யுவராஜ் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கிளப் அணியின் ஜெர்ஸி மற்றும் கிட்களை மிகவும் ஆர்வத்துடன் வாங்கி சேகரித்து வழக்கத்தை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

28 வயதான ஜெஸ்ஸி லிங்கார்ட், அட்டாக்கிங் மிட்ஃபீல்டராக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com