'மிகவும் வருந்துகிறேன்’ - வீரர்கள் தேர்வில் மதம் குறித்த புகாருக்கு வாசிம் ஜாபர் பதில்

'மிகவும் வருந்துகிறேன்’ - வீரர்கள் தேர்வில் மதம் குறித்த புகாருக்கு வாசிம் ஜாபர் பதில்
'மிகவும் வருந்துகிறேன்’ - வீரர்கள் தேர்வில் மதம் குறித்த புகாருக்கு வாசிம் ஜாபர் பதில்

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் வாசிம் ஜாபர். அண்மையில் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். சங்க நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக ஜாபர் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா. அந்த குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்ததாக சொல்லியுள்ளார் ஜாபர். 

“சிபாரிசு செய்வதாக சொல்லி தகுதியும், திறனும் இல்லாத வீரர்களை அணிக்குள் சேர்க்கும்படி நிர்பந்தித்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் இது மாதிரியான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். பயிற்சிக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் வெள்ளி அன்று நமாஸ் செய்தேன். நான் மதவாதி என்றால் பயிற்சியை தவிர்த்துவிட்டு நமாஸ் செய்திருப்பேன். ஆனால் நான் அதை செய்யவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது” என ஜாபர் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com