“இதனால் தான் நான் 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகினேன்” - காரணம் சொல்லும் ரெய்னா!

“இதனால் தான் நான் 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகினேன்” - காரணம் சொல்லும் ரெய்னா!
“இதனால் தான் நான் 2020 ஐபிஎல்  தொடரிலிருந்து விலகினேன்” - காரணம் சொல்லும் ரெய்னா!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. அவரை ‘சின்ன தல’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பது உண்டு. அமீரகத்தில் நடைபெற்ற கடந்த 2020 ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலகினார். அது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்த சூழலில் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை ரெய்னாவே தெரிவித்துள்ளார்.

“நான் இருபது ஆண்டு காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அந்த சூழலில் எனது குடும்பத்தினருடன் நான் இருப்பது எனக்கு முக்கியமானதாக பட்டது. கிரிக்கெட்டா? குடும்பமா? என யோசித்த போது கிரிக்கெட் எப்போது வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். குடும்பம் தான் முக்கியம் என எனக்கு தோன்றியது. அது தான் சரியான முடிவும் என தெரிந்தது. 

அதே நேரத்தில் பஞ்சாபில் நடந்த அசம்பாவித சம்பவமும் நான் குடும்பத்துடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தை கொடுத்தது. ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. இந்தியா வந்த பிறகும் அணியினருடன் தொடர்பில் இருந்தேன்” என தெரிவித்துள்ளார் ரெய்னா. 

ரெய்னா இல்லாத சென்னை அணி கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கே செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது சென்னை அணி. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com