“அஷ்வினுக்கு இந்திய ஷார்ட்டர் பார்மெட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை” -சுனில் கவாஸ்கர்

“அஷ்வினுக்கு இந்திய ஷார்ட்டர் பார்மெட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை” -சுனில் கவாஸ்கர்
“அஷ்வினுக்கு இந்திய ஷார்ட்டர் பார்மெட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை” -சுனில் கவாஸ்கர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அசத்தி வரும் தமிழக ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய ஷார்ட்டர் பார்மெட் அணியில் மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், அதற்கு அவர் செட்டாக மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். 

“எனக்கு தெரிந்து அஷ்வின் இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. ஏழாவது பேட்டிங் ஆர்டரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அந்த இடத்தை ஷார்ட்டர் பார்மெட்டில் நிரப்பிவிட்டார். ஜடேஜாவும் அணியில் இருக்கிறார். 

அதனால் அவர் அணிக்கு செட்டாக மாட்டார். ஆனால் எப்படியும் அடுத்த  ஆறு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் ஜொலிப்பார்” என தெரிவித்துள்ளார். 

அஷ்வின் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் கடந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com