டெஸ்ட் கிரிக்கெட்டில் இர்பான் பதான் தரமான சம்பவம் செய்த நாள் இன்று!
டைம்லைனை அப்படியே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளுக்கு பின்னோக்கி சுழற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இர்பான் பதான் செய்த தரமான சம்பவம் செய்த நாள் என்பது தெரியவரும்.
பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி மைதானத்தில் 2006இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஆட்டம் காண செய்திருப்பார் பதான்.
டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருப்பார் பதான். அந்த பவரின் நான்காவது பந்தில் சல்மான் பட், ஐந்தாவது பந்தில் யூனிஸ் கான், ஆறாவது பந்தில் முகமது யூசப் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார் பதான்.
இந்தியாவுக்காக 29 போட்டிகளில் விளையாடியுள்ள பதான் 1105 ரன்களையும், 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 120 ஒருநாள் மற்றும் 24 டி20 தொடர்களிலும் பதான் விளையாடியுள்ளார். தோனி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ததும் இதே தொடரில் தான்.