"கேப்டன் 7" - தல தோனி நடிக்கும் அனிமேஷன் தொடர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அனிமேஷன் தொடர் ஒன்றில் நடிக்கிறார்.
கேப்டன்-7 என பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொடரை, தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து தயாரிக்கின்றனர். கிரிக்கெட் தவிர தன் வாழ்க்கையில் இடம்பெற்ற பிற விருப்பங்கள் குறித்து தொடர் தயாரிக்கப்பட்டுள்ளதாக தோனி தெரிவித்துள்ளார். இந்த தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது.
தோனியை இதுவரை பார்த்திடாத வகையில் புனைவாக இந்த தொடருக்கான கதை உருவாக்கப்பட்டு வருகிறது. உளவு பார்க்கும் வகையில் இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டு வருகிறதாம்.
“கிரிக்கெட் மட்டுமல்லாது எனது பிற ஆர்வங்களையும் இந்த தொடர் உயிர்ப்பிக்கும் என நினைக்கிறேன். இதன் கதை அருமையாக உள்ளது” தோனி அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு அச்சாரமாக தயாரிப்பு தரப்பு லோகோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தோனியின் தயாரிப்பு நிறுவனம் புராண அறிவியல் அடிப்படை கொண்ட புனைகதை ஒன்றையும் வெப் சீரிஸாக வெளியிட உள்ளது. அந்த தொடருக்கான கதை வெளியாகத ஒரு புத்தகத்தின் அடிப்படையாக கொண்டு உருவாக்கி வருகிறது எனபதும் குறிப்பிடத்தக்கது.