ஐசிசி விருது : தசாப்தத்தின் சிறந்த ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதை வென்றார் தோனி!
சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2011 நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இயன் பெல் ரன் அவுட்டில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தினால் முதலில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் 137 ரன்களை எடுத்திருந்தார். இருப்பினும் அவர் மீண்டும் விளையாட அப்போதைய இந்திய கேப்டன் தோனியால் அழைக்கப்பட்டார். அது ரசிகர்களின் மனதிலிருந்து என்றென்றும் நீக்க முடியா நினைவலைகள். அது தோனியின் கேம் ஸ்பிரிட்டும் கூட. அதுபோல கிரிக்கெட் களத்தில் தோனி தனது கேம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விருதுக்கான போட்டியில் வெட்டோரி, ஜெயவர்த்தனே, கேத்ரின் பிராண்ட், மெக்கல்லம், மிஸ்பா உல் ஹாக், அன்யா, கேன் வில்லியம்சன் மற்றும் கோலி ஆகியோர் இருந்தனர்.
நன்றி : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (வீடியோ)