சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிரஸ்கோதிக் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிரஸ்கோதிக் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிரஸ்கோதிக் ஓய்வு
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மார்கஸ் டிரஸ்கோதிக் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரஸ்கோதிக். 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5825 ரன்களும், 123 ஒரு நாள் போட்டிகளில் 4335 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 14 சதங்களும் ஒரு நாள் போட்டியில் 12 சதங்களும் எடுத்துள்ளார். முதல் தரபோட்டியில் சோமர்செட் அணிக்காக விளையாடியுள்ள, டிரெஸ்கோதிக், 26,234 ரன்கள் குவித்துள்ளார். இதில் 52 சதங்களும் அடங்கும். 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ள டிரஸ்கோதிக், ‘’கடந்த 27 வருடங்களாக கிரிக்கெட் விளையாடிவருகிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து விளையாடினேன். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. இப்போது ஓய்வு பெறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com