பிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பிரபல கால்பந்து வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு
Published on

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரரான பவுல் கேஸ்கோய்க்னே மீது காவல்துறையினர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பவுல் கேஸ்கோய்க்னேவிற்கு தற்போது 51 வயதாகிறது. இவர் இங்கிலாந்துக்காக 1988ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை சர்வதேச கால்பந்து அணியில் விளையாடியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் சிறந்த தடுப்பாட்டக்காரராக இவர் திகழ்ந்தார். இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. இதுதவிர சில கமிட்டிகளிலும் இவர் கால்பந்து விளையாடியுள்ளார்.

1990ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் பவுல் மிகப் பிரபலமடைந்தார். ஜெர்மெனி அணிக்கு எதிராக நடைபெற்ற அரையுறுதிப்போட்டியில் நடுவரிடம் மஞ்சள் கார்டு வாங்கிக்கொண்டு, கண்ணீரோடு விளையாடிய பவுலை ரசிகர்கள் கொண்டாடினர். கால்பந்து போட்டியில் மஞ்சள் கார்டு வாங்கினால், அடுத்த போட்டியில் விளையாட முடியாது. பவுல் மஞ்சள் கார்டு வாங்கியது அரை இறுதிப் போட்டி என்பதால், இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு பழகிப்போனார். இது இவரது பெயரை சிதைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை திடீரென காவல்துறையினர் கைது செய்தனர். ஓடும் ரயிலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், அவரை கைது செய்வதாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்தது. அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பவுல் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பவுலுக்கு காவல்துறை தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com