சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட சம்மதித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த டேவ் கேமரூன்

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட சம்மதித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த டேவ் கேமரூன்
சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட சம்மதித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த டேவ் கேமரூன்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கடைசிப் போட்டியில் விளையாட ஏன் சம்மதித்தோம் என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரூன் விளக்கமளித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 200 ஆவது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியை 2013 ஆம் ஆண்டு விளையாடினார். அந்தத் தொடருடன் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். இந்தியா அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸுடன் விளையாடியது. மேலும் அந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தத் தொடர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ்கீடா இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர் "பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், எங்களை சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டிக்கு விளையாட அழைப்புவிடுத்தார். மேலும், ஓய்வுப் பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கினார். அதறக்காக இப்போதும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். பிசிசிஐயுடன் எப்போதும் எங்களுக்கு நல்ல உறவு இருந்திருக்கிறது. அதனால்தான் அந்தத் தொடரை விளையாட சம்மதித்தோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "அந்தத் தொடரை வேறு நாடு விளையாட வேண்டியதாக இருந்தது. ஆனால் இறுதியாக நாங்கள் விளையாடினோம். அதுவும் நாங்கள் சச்சின் டெண்டுல்கரின் 200 ஆவது போட்டிக்கான டெஸ்ட் தொடரில் விளையாடுவது எங்களுக்கு கெளரவுமும் கூட அதை பெருமையாகவும் கருதுகினோம். எனவே அந்தத் தொடரை நாங்கள் மிஸ் செய்ய விரும்பவில்லை. உடனடியாக சற்றும் யோசிக்காமல் சீனிவாசனிடம் நிச்சயமாக வருகிறோம்" என தெரிவித்தோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com