"கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியது தோனியின் முடிவுதான்"முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து!

"கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியது தோனியின் முடிவுதான்"முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து!
"கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியது தோனியின் முடிவுதான்"முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கருத்து!

2019 உலகக் கோப்பைக்கு பின்பு கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருப்பது என்ற முடிவை தோனி எடுத்ததுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார், அதைப் பொறுத்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனியின் எதிர்காலம் மற்றும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அதில் " நான் ஒரு விஷயத்தில் மிக மிக தெளிவாக இருக்கிறேன். உலகக் கோப்பை முடிந்தவுடன் தோனியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர்தான் கிரிக்கெட்டிலிருந்து தான் கொஞ்சநாள் ஒதுங்கியிருக்க நினைப்பதாக கூறினார். இதனையடுத்துதான் ரிஷப் பன்ட்டை அணியில் சேர்த்தோம், இப்போதும் அவரை அணியில் வைத்துள்ளோம்" என்றார் அவர்.

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "இப்போது கே.எல்.ராகுலும் டி20, 50 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பணியை சிறப்பாக செய்கிறார். அதனை நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போதே நிரூபித்துவிட்டார். ஐபிஎல் நடந்திருந்தால் தோனியின் பழைய ஆட்டத்தை காண வாய்ப்பு கிடைத்திருக்கும். துரதிருஷ்டவசமாக இப்போது அதற்கான வாய்ப்பு அமையவில்லை" என கூறியுள்ளார் பிரசாத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com