\
’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்!

’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்!

’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மான் கில்-லை சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் இந்திய ஏ அணி கிரிக்கெட் விளையாடி வந்தது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் இரட்டை சதம் அடித்து, குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் தனக்கு வருத்தம் ஏற்பட்டதாக ஏற்கனவே கூறியிருந்தார் கில்.

இந்நிலையில், இரட்டை சதம் விளாசியதை அடுத்து, இந்திய அணியில் அவரைச் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக்-கும் இதே கோரிக்கையை இப்போது வைத்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘’இரட்டை சதம் அடித்ததன் மூலம், ஒரே இரவில் புகழடைந்திருக்கிறார் சுப்மான் கில். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவரை களமிறங்கலாம். 4 வது வரிசைக்கு அவர் பொருத்தமாக இருப்பார்’’ என்று தெரிவித் துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com