\
“ எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரனாக மாறி வருகிறார்”- கில்லை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!

“ எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரனாக மாறி வருகிறார்”- கில்லை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!

“ எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரனாக மாறி வருகிறார்”- கில்லை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் "அந்த பையன் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரனாக மாறி வருகிறார்" என கில்லை புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி. 

“அந்த பையன் எனக்கு பிடித்த வீரனாக மாறி வருகிறார். அவரது ஆட்டம் வேற லெவல். தெறிக்கும் துப்பாக்கிபோல இருக்கிறது அவரது ஆட்டம். ஃபிராண்ட் ஃபூட், பேக் ஃபூட் என அவரது ஃபூட் மூவ்மெண்ட் அருமை. அதன் மூலம் அவர் பவுலர்களுக்கு மெசேஜ் கொடுக்கிறார். அவர் ஆடுகிற ஒவ்வொரு ஷாட்டும் வேற லெவல். அவரது ஆட்டத்தை  பார்த்துக் கொண்டே இருக்கலாம்போல இருக்கிறது. அவர் ரோகித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது மாஸ்” எனத் தெரிவித்துள்ளார் ஹஸ்ஸி. 

“இந்திய அணியின் எதிர்காலம்.  என்ன செய்கிறோம் என்ற தெளிவான புரிதலுடன் கில் விளையாடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார் லக்ஷ்மண்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com