நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வியை தழுவியுள்ளது. அதனால் பலரும் இந்திய அணியின் வீரர்களை விமர்சித்து வருகின்றனர். இதில் சில ட்ரோல்களும் அடங்கும். கேப்டன் விராட் கோலியையும் ஆன்லைன் மூலமாக சிலர் வசை பாடி வருகின்றனர். விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் சிலர் மோசமான வகையில் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ட்வீட் மூலம் ஒரு செய்தியை சொல்லியுள்ளார்.
“அன்புள்ள விராட்,
அவர்களிடம் யாரும் அன்பு காட்டாததால் அவர்கள் அனைவரும் வெறுப்புணர்வு நிறைந்தவர்களாக உள்ளனர். அதனால் அவர்களை மன்னியுங்கள்.
அணியை பாதுகாக்கவும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.