முதுகு வலி போயே போச்... இன்று களமிறங்குகிறார் விராத்!

முதுகு வலி போயே போச்... இன்று களமிறங்குகிறார் விராத்!
முதுகு வலி போயே போச்... இன்று களமிறங்குகிறார் விராத்!

முதுகுவலி குணமாகிவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’’ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். தங்கள் கிரிக்கெட் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருப்பதாக எந்த வீரரும் நினைக்கவில்லை. வெளியில் இருந்துதான் இதுபோன்று பரப்பி வருகிறார்கள். அதோடு நாங்கள் எந்த வீரருக்கும் எந்த உறுதியையும் கொடுக்கவில்லை. எனது முதுகுவலி குணமாகிவிட்டது. இந்தப் போட்டியில் நான் கண்டிப்பாக விளையாடுவேன். 


இந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்பு எடுத்து ரன்கள் குவிப்பார்கள் என்று நினைக்கிறேன். பும்ரா காயத்தில் இருந்து குணமாகி இருப்பது உற்சாகமாக இருக்கிறது. அவர் அட்டாக்கிங் பந்துவீச்சாளர். டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். தென்னாப்பிரிக்க தொடரில் அவர் தன் திறமையை நிரூபித்துள்ளார். மனரீதியாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் அவர். எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை சேர்ப்பது பற்றி கேட்கிறார்கள். அதை பிட்சின் தன்மையை பொறுத்து முடிவு செய்வோம். இந்த போட்டியை வெல்ல கடுமையாக போராடுவோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com