செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணிக்கு முதல் பதக்கம்

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணிக்கு முதல் பதக்கம்
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய மகளிர் அணிக்கு முதல் பதக்கம்

முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்  தொடரின் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கல பதக்கத்தை வென்றிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட்  வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக பதக்கம் பெற்றுள்ளது. போர் நடந்து வரும் சூழலில் உக்ரைன் மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறது

44வது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்தியா - பி அணி சார்பில் குகேஷ் பிரக்யானந்தா, சரின், சத்வானி ஆகியோரும் மகளிர் பிரிவில் ஹம்பி, வைஷாலி, தான்யா, குல்கர்னி ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திலிருந்து 40 குளிர்சாதனப் பேருந்துகளில் வீரர் வீராங்கனைகள். நடுவர்கள் வர உள்ளனர். முதல் முறையாக இந்திய மகளிர் அணி ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் தமிழக வீரர் குகேஷ் மற்றும் சரின் ஆகியோர் தங்க பதக்கம் பெற உள்ளனர். பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் பெற உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com