“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்

“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்

“என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம்” - டிராவிட்
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து அணிகளையும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டினார். அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்ததாகக் குறிப்பிட்ட திராவிட், அடுத்த முறை இங்கிலாந்து பயணத்திற்கு முன்னர் சரியான முறையில் தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பிடிஐ செய்திக்கு டிராவிட் அளித்த பேட்டியில், “முதலில் நேர்மையாக இருப்போம். இங்கிலாந்து மண் பேட்டிங் செய்வதற்கு சற்றே கடினமானது. இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் பேட்டிங் செய்ய தடுமாறினார்கள். இந்தத் தொடரில் விராட் கோலி மட்டும் இல்லையென்றால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு எளிதாக போட்டி இருந்திருக்காது. நானும் இங்கிலாந்தில் விளையாடி இருக்கிறேன். ஆடுகளம் மிகவும் கடினமாக இருக்கும். அந்த ஆடுகளங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சிரமமாக விஷயம்தான். 

இருப்பினும், நாம் முன்னேறி செல்ல வேண்டும். அடுத்தமுறை அங்கு சென்றால் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அந்த மண் எவ்வளவு கடினமாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். ரவிசாஸ்திரி என்ன நினைப்பார், என்ன நினைக்க மாட்டார் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. என்னை பொறுத்தவரை என்ன நாம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் முக்கியம். 

அடுத்தமுறை செல்லும் போது எந்தப் பாடங்களை அங்கு எடுத்துச் செல்லப் போகிறோம். நாம் சிறந்த அணியா இல்லையா என்பது விஷயம் அல்ல. அது எனக்கு தேவையற்றது. இங்கிலாந்து சுற்றுப் பயணம் போன்றவை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விளையாட முடியும். அதனால், ஒரு தொடரில் தோல்வி அடைந்தால் அதில் விளையாடும் வீரர் மற்றும் பயிற்சியாளர் விரக்தி அடைவார்கள். ஏனெனில், அடுத்த நான்கு ஆண்டுகளில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. இந்தமுறை இங்கிலாந்து தொடர் சிறப்பானதாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com