“கோப்பையை வெல்வதை காட்டிலும் பலருக்கு நீங்கள் தன்னம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்” - ஏபிடி

“கோப்பையை வெல்வதை காட்டிலும் பலருக்கு நீங்கள் தன்னம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்” - ஏபிடி
“கோப்பையை வெல்வதை காட்டிலும் பலருக்கு நீங்கள் தன்னம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்” - ஏபிடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள விராட் கோலியை மனதார புகழந்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். பெங்களூர் அணி எலிமினேட்டரில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி பயணித்த இந்த ஒன்பது ஆண்டு காலம் முழுவதும் நானும் அவருடன் இதே அணியில் பயணித்துள்ளேன். அணியை நீங்கள் முன்னின்று வழிநடத்தியது எங்கள் அதிர்ஷ்டம். அணியை நீங்கள் வழிநடத்தியது பலரையும் ஈர்த்துள்ளது. என்னையும் தான். சிறந்த வீரனாகவும், சிறந்த மனிதனாகவும் என்னை பக்குவமடைய செய்துள்ளது உங்கள் கேப்டன்சி. அணியின் தலைவனாக பல மைல்களை கடந்துள்ளீர்கள். 

உங்களை களத்திலும், அதற்கு வெளியேயும் அறிந்தவன் நான். கோப்பையை வெல்வதை காட்டிலும் பலருக்கு நீங்கள் தன்னம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 

இருவரும் இணைந்து 229 ரன்களுக்கு கடந்த 2016 ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com