\
ஏலத்துக்கு வருகிறது இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம்

ஏலத்துக்கு வருகிறது இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம்

ஏலத்துக்கு வருகிறது இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம்
Published on

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் ஏலத்திற்கு வரவுள்ளது. 

1952-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த கஷாபா ஜாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். இதுவே இந்தியர் ஒருவர் ஒலிம்பிக்கில் வென்ற முதல் பதக்கம். இந்த நிலையில் கஷாபா வாங்கிய பதக்கத்தை ஏலத்திற்கு விட அவரது மகன் ரஞ்சித் ஜாதவ் தெரிவித்துள்ளார். இது வேதனையான முடிவு தான் என்றாலும் தங்கள் தந்தையின் பெயரில் மல்யுத்த பயிற்சி மையத்தை தொடங்குவதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை என அவர் கூறியுள்ளார். தமது தந்தையின் பெயரில் மல்யுத்த பயிற்சி தொடங்கப்படும் என வாக்குறுதி கொடுத்த மஹாராஷ்ட்ர அரசு, 8 ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் இருப்பதாக ரஞ்சித் ஜாதவ் வேதனை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com