Tottenham Hotspur | இவுக அந்த ஊரு ஈ சாலா கப் நம்தே..!

ஒவ்வொரு ஆண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் ரசிகர்கள் போல் ஸ்பர்ஸ் ரசிகர்களும் இந்த ஆண்டு கோப்பை கிடைத்துவிடும், இம்முறை எதையாவது வென்றுவிடுவோம் என்று கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள்
கால்பந்து மைதானம்
கால்பந்து மைதானம்PT

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்து கிளப்களுள் ஒன்று. ஆனால் கடந்த 32 ஆண்டுகளாக ஒரு கோப்பை கூட அந்த அணியால் வெல்ல முடியவில்லை. கடைசியாக 1990-91 FA கப்பை வென்றிருந்தது அந்த அணி. ஒவ்வொரு ஆண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் ரசிகர்கள் போல் ஸ்பர்ஸ் ரசிகர்களும் இந்த ஆண்டு கோப்பை கிடைத்துவிடும், இம்முறை எதையாவது வென்றுவிடுவோம் என்று கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அது நடப்பதேயில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பல முறை வெற்றிக்கு அருகில் வந்தது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி. 2015-16 பிரீமியர் லீக் தொடரின் கடைசி கட்டம் வரை அந்த அணி போட்டியில் இருந்தது. ஆனால் கடைசி சில போட்டிகளில் சொதப்ப லெஸ்டர் சிட்டி பிரீமியர் லீக் சாம்பியனாக மகுடம் சூடியது. அதேபோல் 2019 சாம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது அந்த அணி ஆனால் ஃபைனலில் சக பிரீமியர் லீக் அணியான லிவர்பூலிடம் 1-0 என தோல்வியடைந்தது. அடுத்ததாக 2021 லீக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதில் 1-0 என மான்செஸ்டர் சிட்டியிடம் தோற்றது. இப்படி சமீபத்தில் கோப்பைக்கு மிக அருகில் வந்தாலும் அவர்களால் மகுடம் சூட்ட முடிவதில்லை.

இங்கிலாந்தின் 'பிக் 6' கிளப்களுக்குள் ஒன்றாகக் கருதப்பட்டாலும் டாப் 4 அணிகளுக்குள் ஒன்றாக ஸ்பர்ஸ் எப்போதும் கருதப்பட்டதில்லை. ஒருகட்டத்தில் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெற்றுக்கொண்டிருந்தாலும், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடட், செல்சீக்கு நிகராக அவர்கள் கொண்டாடப்பட்டத்தில்லை. காரணம் - அந்தக் கோப்பை!

ஒருவகையில் அந்த அணியின் உரிமையாளர் ரிச்சர்ட் லெவியையே இதற்குக் காரணம் என்று சொல்லலாம். இரும்புக் கரம் கொண்டவராகக் கருதப்படும் லெவி, அவ்வளவு எளிதில் எதற்கும் வளைந்து கொடுப்பவர் அல்ல. அது மற்ற அணிகளுக்காக இருந்தாலும் சரி, தன் அணிக்காக இருந்தாலும் சரி. லெவியிடம் பிசினஸ் செய்வது எந்த அணிக்கும் எளிதல்ல. அவ்வளவு எளிதில் தன் அணியின் வீரர்களை விற்றுவிடமாட்டார். உதாரணம், ஹேரி கேன். இங்கிலாந்து அணியின் கேப்டன், உலகின் சூப்பர் ஸ்டார் ஸ்டிரைக்கர்களுள் ஒருவர். ஆனால் ஒரு கோப்பை வெல்லவேண்டும் என்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். பல அணிகள் அவரை வாங்க நினைத்திருக்கின்றன. ஆனால் லெவி விற்கவில்லை. இப்போதுகூட பேயர்ன் மூனிச் அவரை வாங்க போராடிக்கொண்டிருக்கிறது. லெவி அசரவில்லை.

சில ஆண்டுகள் முன்பு மரிஷியோ பொஷடினோ பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி புதிய ஸ்டேடியத்துக்கு மாறியது. புதிய ஸ்டேடியம் கொண்டு வரும் லாபமே லெவிக்கு முக்கியத்துவமாக இருந்தது. அதனால் அணி வீரர்களை வாங்குவதற்கான முதலீடுகளை பெருமளவு குறைத்தார். அது அணியின் முன்னேற்றத்தை பாதித்தது. அதேபோல் 2021 லீக் கோப்பை ஃபைனலுக்கு முன்பாக பயிற்சியாளர் ஜோசே மொரினியோவை பதவியிலிருந்து நீக்கினார் அவர். மொரினியோவுக்கும் அவருக்குமான உறவில் விரிசில் ஏற்பட்டிருந்தது. ஒருவேளை மொரினியோ கோப்பை வென்றுவிட்டால் அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது என்பதால், அதற்கு முன்பே அவரை வெளியேற்றினார் லெவி. ஆம், அந்த அளவுக்கு தீர்க்கமானவர்!

கால்பந்து மைதானம்
உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய முதல் கட்ட அணியில் லாபுஷான் இல்லை; இந்திய வம்சாவளி வீரருக்கு வாய்ப்பு!

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அந்த அணி, இப்போது ஒரு புதிய பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்த சீசனுக்கு முன் அந்த அணியின் பயிற்சியாளராக பதவியேற்றிருக்கிறார் ஆஞ்சி போஸ்டகாக்லூ. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், செல்டிக் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தியிருந்தார். அட்டாகிங் ஸ்டைலில் தன் அணியை சிறப்பாக ஆடச் செய்யக்கூடியவர். இளம் வீரர்களை வைத்து ஒரு நல்ல அணியைக் கட்டமைக்கக் கூடியவர். அதனால், சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பொஷடினோ ஒரு இளம் அணியை நல்ல டீமாக உருவாக்கினாரோ அதேபோல் போஸ்டகாகுலூவும் இந்த அணியை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றதுபோல் சிலபல மாற்றங்களோடு அந்த அணியும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தயாராகியிருக்கிறது.

நெடுங்காலம் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹூகோ லோரிஸ் வெளியேறவிருக்கிறார். கக்லியால்மோ விகாரியோ இனி கோல்கீப்பராக செயல்படுவார். அதேபோல் டிஃபன்ஸிலும் மிக்கி வேன் டி வென், உடோஜி போன்ற வீரர்கள் அந்த அணியின் ஸ்டார்டிங் லெவனில் இடம்பெறுவார்கள். நடுகளத்திலும் பிசூமா அல்லது பாபே மட்டா சார் ஆகியோரில் ஒருவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இல்லையெனில், பார்சிலோனாவுக்கு எதிரான ப்ரீ சீசன் போட்டியில் 2 கோல்கள் அடித்த ஆலிவர் ஸ்கிப் கூட முக்கிய வீரராக உருவெடுக்கலாம். அட்டாக்கில் ஜேம்ஸ் மாடிசன் வந்திருப்பது நீண்ட காலத்துக்குப் பிறகு அந்த அணிக்கு ஒரு அட்டகாசமான நம்பர் 10 வீரரைக் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் பல அட்டகாசமான இளம் வீரர்கள் அந்த அணியில் இணைந்திருக்கிறார்கள்.

கால்பந்து மைதானம்
உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய முதல் கட்ட அணியில் லாபுஷான் இல்லை; இந்திய வம்சாவளி வீரருக்கு வாய்ப்பு!

போஸ்டகாக்லூ எதிர்பார்க்கும் விதத்தில் ஆடக்கூடிய வீரர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஹேரி கேன் அணியில் தொடரும்பட்சத்தில் அவருடைய முழு அட்டாக்கிங் திறனையும் அந்த அணியால் பிரதிபலிக்க முடியும். டிஃபன்ஸ் மட்டும் ஓரளவு சரியாக செயல்பட்டால் அந்த அணியால் நிச்சயம் எழுச்சி காண முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com