\
yamal - messi
yamal - messiweb

2026 கால்பந்து உலக சாம்பியன் யார்? அர்ஜென்டினா-ஸ்பெயின் அணிகள் மோதல்!

நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Published on
Summary

2026 உலகக்கோப்பை இறுதியில் அர்ஜென்டினா-ஸ்பெயின் மோதல் உலக கவனத்தை ஈர்க்கிறது. 16 ஆண்டுகள் கழித்து இறுதிக்கு வந்த ஸ்பெயின், பிரான்ஸை வீழ்த்தி உற்சாகத்தில் உள்ளது. மறுபுறம் மெஸ்ஸியை கோப்பையுடன் ஓய்வு பெறச் செய்ய அர்ஜென்டினா தீவிரமாக தயார். அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், சாம்பியன் அணிக்கு பதக்கங்களுடன் சிறப்பு மோதிரங்களும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள ஸ்பெயின் அணிக்கும், மெஸ்ஸியை கோப்பையுடன் ஓய்வுபெற அனுமதிக்கும் அர்ஜெண்டினா அணிக்குமான இந்த மோதல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

spain vs argentina finalw
spain vs argentinaweb

நடப்பு சீசனை பொறுத்தவரையில் தங்களுடைய தடுப்பாட்டத்தில் பட்டையை கிளப்பியிருக்கும் ஸ்பெயின் அணி அரையிறுதியில் பலம்வாய்ந்த பிரான்ஸை தோற்கடித்தது. அதேபோல ஆட்டத்தின் இறுதிநேரத்தில் வலுவான கம்பேக் கொடுக்கும் அர்ஜெண்டினா அணியில், மெஸ்ஸி அணிக்காகவும், மற்றவீரர்கள் மெஸ்ஸிக்காகவும் விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

yamal - messi
கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி படைக்கவிருக்கும் 11 சாதனைகள்! என்னென்ன?

ஃபிஃபா வழங்கும் புதிய கௌரவம்..

கால்பந்து உலகக்கோப்பையில் முதல் முறையாக, சாம்பியன்ஷிப்பைக் கொண்டாடும் விதமாக வெற்றிபெறும் அணி வீரர்களுக்கு மோதிரங்களை வழங்குகிறது. சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு மோதிரங்கள் வழங்குவது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து வட அமெரிக்க விளையாட்டுகளில் இருந்து வரும் ஒரு பாரம்பரியமாகும், ஆனால் இது உலகின் பிற பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுவதில்லை. இந்த இறுதிப் போட்டி அமெரிக்காவில் நடைபெறுவதால், ஃபிஃபாவின் இந்த நடவடிக்கை அந்தப் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தெரிகிறது.

yamal - messi
அர்ஜென்டினாவிடம் இங்கிலாந்து தோல்வி.. பயிற்சியாளரை சாடிய டொனால்ட் டிரம்ப்!

உலகக் கோப்பையை வென்ற அணியின் வீரர்களுக்கு வழக்கம் போல் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும் நிலையில், இறுதிப் போட்டி முடிந்த சிறிது நேரத்திலேயே வெற்றி பெற்ற அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கும் தற்காலிக மோதிரங்கள் வழங்கப்படும். இறுதியில், வெற்றி பெற்ற அணிக்கு 30 பிரத்தியேக மோதிரங்கள் வழங்கப்படும்.

மொத்தம் 2026 மோதிரங்கள் தயாரிக்கப்படும் நிலையில் வெற்றிபெற்ற அணியினருக்கு வழங்கும் 30 மோதிரங்களை தவிர்த்து மற்ற மோதிரங்கள் பொதுமக்களின் விற்பனைக்கு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

yamal - messi
ஏலத்திற்கு வரும் 'Hand Of God' சர்ச்சை பந்து.. 77 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com