messipt desk
கால்பந்து
ரூ. 64 லட்சத்திற்கு ஏலம் போன பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி அணிந்திருந்த சீருடைகள்...
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி அணிந்திருந்த 6 கால்பந்து சீருடைகள் 64 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின்போது அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அணிருந்திருந்த 6 கால்பந்து சீருடைகள் ஏலம் விடப்பட்டன. நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு மெஸ்ஸியின் சீருடையை ஏலத்தில் எடுக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
Lionel MessiTwitter
இறுதியாக 64 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு அது ஏலம் போனது. கடந்த ஆண்டு இதேபோன்று நடைபெற்ற ஏலத்தில் 1998 என்.பி.ஏ. இறுதிப் போட்டியின் போது பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் அணிந்திருந்த சீருடை 83 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதே விளையாட்டு வீரர் ஒருவரின் சீருடை அதிகபட்ச ஏலத்தில் எடுக்கப்பட்டதாகும்.