முக்கியமான நேரத்தில் காப்பாற்றிய கோல்கீப்பர்! ஹார்ட் பீட் எகிறிய ஃபைனலில் இந்தியா த்ரில் வெற்றி!

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்புக்கான பரப்பரப்பான இறுதி ஆட்டத்தில சடன் டெத் முறையில் குவைத் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
SAFF Championship
SAFF ChampionshipTwitter

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

120 நிமிடங்களுக்கு பின் 1-1 என சமனில் முடித்த போட்டி!

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் குவைத் அணி வீரர் ஷபைப் அல் கால்டி, 14 வது நிமிடத்தில் கோல் அடிக்க இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமானது. அதற்கு பிறகு எவ்வளவு போராடியும் இந்தியாவின் கோல் அடிக்கும் முயற்சி தவறியே போனது. இறுதிவரை எப்படி போகும், வெற்றி யாருக்கு செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்த நிலையில், போட்டியின் 39வது நிமிடத்தில் லல்லியன்சுவாலா சாங்டே இந்தியாவிற்காக கோலை எடுத்துவந்து அசத்தினார்.

India - Kuwait
India - Kuwaittwitter

அடுத்த கோலுக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டின. இறுதிவரை சிறப்பான டிஃபண்டிங் கேம் ஆடிய இரு அணிகளும் அடுத்த கோலடிக்க எந்த வாய்ப்பையும் தராமல் போட்டியை 1-1 என சமநிலையில் முடித்தனர்.

பெனால்டி ஷூட்டிலும் 4-4 என்ற கணக்கில் சமனில் முடிந்த போட்டி!

நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் குவைத் அணி இரண்டுக்கும் இடையே அனல்பறந்த இந்த இறுதிஆட்டத்தில், இரு அணிகளுமே தங்ககுளுடைய தீரத்தை வெளிப்படுத்தின. 120 நிமிடங்கள் நடைபெற்ற போட்டி 1-1 என சமனில் முடிந்த நிலையில், போட்டியின் முடிவு பெனால்டி ஷூட் முறைக்கு சென்றது.

அப்போது இரண்டு அணிக்கும் கிக் அவுட் செய்யும் வாய்ப்பு 5 முறை வழங்கப்பட்டது. இதில் முதல் வாய்ப்பை கேப்டன் சுனில் ஷேத்ரி கோலாக மாற்றி இந்தியாவிற்கு பாசிட்டிவாக ஆரம்பித்தார். மறுமுனையில் குவைத் வீரர் முதல் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார். இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமாயினர்.

அடுத்தடுத்து 2 வாய்ப்புகள் என தொடர்ச்சியாக 3 வாய்ப்புகளில் கோலடிக்க, பதிலுக்கு குவைத் வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை அடிக்க, போட்டி 3-2 என சமனில் இருந்தது. இந்தியாவின் கை உயரத்தில் இருந்த போது 4ஆவது கிக் அடிக்க வந்த இந்திய வீரர், கோலடிக்கும் முயற்சியில் தோல்வியை சந்திக்க, போட்டி மீண்டும் விறுவிறுப்பானது. 5 பெனால்டி கிக்கின் முடிவில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் 4-4 என சமனில் முடித்தன. மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு கனம் ஹார்ட் பீட் அதிகரிக்கவே ஆரம்பித்தது. பெனால்டி ஷூட் முறையிலும் போட்டி சமனில் முடிய, அடுத்தகட்டமாக போட்டியானது டெத் ஷூட் முறைக்கு சென்றது.

Sudden death முறையில் இந்தியாவை காப்பாற்றிய கோல் கீப்பர்!

பெனால்டி ஷூட் 4-4 என்று சமனில் முடிந்த நிலையில், போட்டியானது இறுதி வாய்ப்பாக சடன் டெத் ஷூட் முறைக்கு சென்றது. இதில் இரு அணிக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் இந்திய அணியின் வாய்ப்பு. இப்போது இந்திய அணியின் கேப்டன் மீண்டும் தன் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்த, இந்திய ரசிகர்கள் சத்தம் அதிகமானது. அடுத்த வாய்ப்பு குவைத்துக்கு சென்றது. தற்போது மைதானத்தில் இருந்த இந்திய அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், போட்டியை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை ரசிகர்களின் கண்களும் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்து மீது தான் இருந்தது.

“ஜெயிச்சுடுறா மாறா” என்ற உள்குமுறல் தொடங்க, சரியான நேரத்தில் சரியான திசையில் டைவ் செய்த குர்பிரீத்சிங், பந்தின் திசையை தடுத்து நிறுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கடைசிவரை அழுத்தத்தை தலைக்கேற்றாமல் இருந்த குர்பிரீத்சிங் இந்திய அணியின் அத்தனை தலைகளையும் நிமிரச்செய்தார். இப்படியாக இந்திய அணி 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com