'UEFA' பிளேயர் ஆஃப் தி இயர் விருது வென்றார் எர்லிங் ஹாலண்ட்! பெப் கார்டியோலா சிறந்த கோச்!

ஐரோப்பிய கால்பந்து சங்கமான UEFA 2022-23 கால்பந்து சீசனுக்கான விருதுகளை அறிவித்துள்ளது..
uefa
uefapt web

2022-23 கால்பந்து சீசனுக்கான UEFA பிளேயர் ஆஃப் தி இயர் விருதை மான்செஸ்டர் சிட்டி ஃபார்வேர்ட் எர்லிங் ஹாலண்ட் வென்று அசத்தினார். பெண்கள் பிரிவில் ஸ்பெய்ன் அணியோடு உலகக் கோப்பை வென்ற அய்டானா போன்மாட்டி வென்றார். மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் கார்டியோலாவும், இங்கிலாந்து மகளிர் தேசிய அணியின் பயிற்சியாளர் செரீனா வெகமனும் பயிற்சியாளர் பிரிவுகளில் விருதை வென்றனர். ஐரோப்பிய கால்பந்து சங்கமான UEFA ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருது விழா மோனகோவில் வியாழக்கிழமை இரவு நடந்தது.

UEFA பிளேயர் ஆஃப் தி இயர் (ஆண்கள் பிரிவு) - எர்லிங் ஹாலண்ட்

மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த முதல் ஆண்டே கிட்டத்தட்ட அனைத்து கோப்பைகளையும் வென்றுவிட்டார், நார்வே சூப்பர் ஸ்டார் எர்லிங் ஹாலண்ட். இத்தனை காலம் அந்த அணிக்கு எட்டாக் கனியாக இருந்த சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல உதவியவர், இங்கிலாந்தின் பிரீமியர் லீக், FA கப் ஆகிய தொடர்களையும் வென்றார். பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் இரண்டிலுமே அவர்தான் இந்த சீசனின் டாப் ஸ்கோரர். ஒட்டுமொத்த ஐரோப்பிய கால்பந்து அரங்கையும் அதிரவைத்த அவர், தன் டீம் மேட்டான கெவின் டி புருய்னாவையும், லயோனல் மெஸ்ஸியையும் விட அதிக ஓட்டுகள் பெற்று இந்த விருதை வென்றிருக்கிறார்.

UEFA பிளேயர் ஆஃப் தி இயர் (பெண்கள் பிரிவு) - அய்டானா போன்மாட்டி

சமீபத்தில் நடந்து முடிந்த பெண்கள் உலகக் கோப்பைத் தொடரை வென்ற ஸ்பெய்ன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நடுகளத்தைக் கட்டி ஆண்ட அவர், அந்த அணியின் இதயமாகவே திகழந்தார். பார்சிலோனா அணியின் அந்த ஸ்டைலை சர்வதேச அரங்கிலும் வெளிப்படுத்தினார். ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் 2 கோல்கள் அடித்ததோடு 2 அசிஸ்ட்டும் செய்து மிரட்டினார்.

UEFA கோச் ஆஃப் தி இயர் (ஆண்கள் பிரிவு) - பெப் கார்டியோலா

மான்செஸ்டர் சிட்டி அணிக்கு ஒரு மிகப் பெரிய சீசனைப் பரிசளித்த கார்டியோலா இந்த சீசனின் ஐரோப்பாவின் சிறந்த பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மான்செஸ்டர் சிட்டி அணியில் எதற்காக இணைந்தாரோ, எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாரோ... அந்த சாம்பியன்ஸ் லீக் தொடரை இந்த ஆண்டு வென்றுவிட்டார். எந்த அணியும் ஆதிக்கம் செலுத்தாத அளவுக்கு கடந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அனைத்து தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தியது. அதற்கான பரிசை வென்றிருக்கிறார் பெப்.

UEFA கோச் ஆஃப் தி இயர் (பெண்கள் பிரிவு) - செரீனா வெகமன்

இங்கிலாந்து தேசிய அணியின் பயிற்சியாளர் செரீனா வெகமன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியை யூரோ கோப்பை வெல்ல வைத்தவர், இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு மிகவும் அருகில் அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெய்னிடம் தோற்று இரண்டாவது இடம் பிடித்தது அந்த அணி. பல முன்னணி வீராங்கனைகள் காயம் காரணமாக வெளியேறியபோதும் அந்த அணியை மிகச் சிறப்பாகக் கட்டமைத்து இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற செரீனா, இந்த விருதை உலக சாம்பியன் ஸ்பெய்ன் அணிக்கு சமர்ப்பித்து அனைவரையும் நெகிழ வைத்தார். ஸ்பெய்ன் கால்பந்து சங்கத் தலைவருக்கும், வீரர்களுக்குமான பிரச்சனை குறித்துப் பேசியவர், அந்த வீராங்கனைகளின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதோடு அவர்களுக்காக தன் ஆதரவுக் குரலையும் பதிவு செய்தார்.

UEFA பிரசிடண்ட் அவார்ட் - மிரோஸ்லாவ் குளோசா

ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரரை கால்பந்துக்கு அப்பார்ப்பட்ட குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக தேர்வு செய்து UEFA கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஜெர்மனியின் முன்னாள் ஃபார்வேர்ட் மிரோஸ்லாவ் குளோசா இந்த ஆண்டுக்கான விருதை வென்றார். ஒருமுறை இவர் அடித்த கோல், இவரது கையில் பட்டு போஸ்ட்டுக்குள் விழுந்தது. நடுவர் கோல் அறிவித்தபோதும், தானாகவே முன்வந்து அது கோல் இல்லை என்று கூறினார் குளோசா. அதேபோல் மற்றொருமுறை தனக்கு வழங்கப்பட்ட பெனால்டியும் தவறாக வழங்கப்பட்டுவிட்டது என்று கூறி நிராகரித்தார். அப்படி நேர்மையாகவும், பலருக்கு முன்னுதாரணமாகவும் இருந்ததற்காக அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது UE

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com