2023-24 சாம்பியன்ஸ் லீக்: முடிந்தது டிரா; ஒரே குரூப்பில் பிஎஸ்ஜி, டார்ட்மண்ட், ஏசி மிலன், நியூகாசில்

தொடரில் பங்கேற்கும் 32 அணிகளும் 8 குரூப்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 26 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றிருந்த நிலையில், மற்ற 6 அணிகளை உறுதி செய்யும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் வியாழக்கிழமை அதிகாலை முடிவுக்கு வந்தன.
champions league
champions leaguept web

2023-24 சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான குரூப்களை முடிவு செய்யும் 'டிரா' வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தொடரில் பங்கேற்கும் 32 அணிகளும் 8 குரூப்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 26 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றிருந்த நிலையில், மற்ற 6 அணிகளை உறுதி செய்யும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் வியாழக்கிழமை அதிகாலை முடிவுக்கு வந்தன. அந்த அணிகள் உறுதியானதும் இந்த டிரா நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் எந்தெந்த அணிகள் இடம்பெற்றிருக்கின்றன? எந்தெந்த அணிகள் அந்த குரூப்பிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெற்றிருக்கின்றன?

குரூப் A அணிகள்:

பேயர்ன் மூனிச் (ஜெர்மனி)
பேயர்ன் மூனிச் (ஜெர்மனி)

பேயர்ன் மூனிச் (ஜெர்மனி), மான்செஸ்டர் யுனைடட் (இங்கிலாந்து), கோபன்ஹேகன் (டென்மார்க்), கேலடசரே (துருக்கி) தகுதிச் சுற்றின் மூலம் முன்னேறிய கேலடசரே, கொபன்ஹேகன் இரு அணிகளும் இந்த குரூப்பில் இடம்பெற்றிருந்தாலும், அந்த அணிகள் மான்செஸ்டர் யுனைடட் போன்ற கிளப்புக்கு நல்ல சவால் கொடுக்கக்கூடியவையே. குரூப் சுற்றில் அனைத்து அணிகளையும் பந்தாடி எப்படியும் பேயர்ன் மூனிச் வழக்கம்போல் முதலிடம் பிடித்துவிடும். அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: பேயர்ன் மூனிச், மான்செஸ்டர் யுனைடட்

குரூப் B அணிகள்:

ஆர்செனல் (இங்கிலாந்து),
ஆர்செனல் (இங்கிலாந்து),

செவியா (ஸ்பெய்ன்), ஆர்செனல் (இங்கிலாந்து), பிஎஸ்வி எய்ந்தோவன் (நெதர்லாந்து), லான்ஸ் (பிரான்ஸ்) சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு மீண்டும் திரும்பியிருக்கும் ஆர்செனல் அணிக்கு ஓரளவு எளிதான பிரிவு கிடைத்திருக்கிறது. பலம் வாய்ந்த ஆர்டேடாவின் அணி எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறவேண்டும். இரண்டாவது இடத்துக்கு இந்த குரூப்பில் நல்ல போட்டி இருக்கும். வரலாற்றின் படி, செவியா அணி இந்தப் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து யூரோபா லீகுக்குள் நுழைந்து அதை வெல்ல வாய்ப்பிருக்கிறது! அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: ஆர்செனல், பிஎஸ்வி எய்ந்தோவன்

குரூப் C அணிகள்:

ரியல் மாட்ரிட்
ரியல் மாட்ரிட்

நேபொலி, ரியல் மாட்ரிட், பிராகா, யுனியான் பெர்லின் சாம்பியன்ஸ் லீக் தொடரின் வெற்றிகரமான அணியான ரியல் மாட்ரிட் எப்படியும் இந்த குரூப்பை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். நேபொலிக்கும் இந்தப் பிரிவு அவ்வளவு கடினமாக இருக்கப்போவதில்லை. ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் யுனியான் பெர்லின் அணி ஏதேனும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கக்கூடும். கடந்த சீசன் சிறப்பாக அமைந்த நிலையில் சில நல்ல வீரர்களை வாங்கியிருக்கும் அந்த அணி, இந்த சீசனையும் நன்றாகத் தொடங்கியிருக்கிறது. அதனால், அவர்கள் ஆச்சர்யங்களை நிகழ்த்த வாய்ப்பிருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: ரியல் மாட்ரிட், நேபொலி

குரூப் D அணிகள்:

பென்ஃபிகா (போர்ச்சுகல்)
பென்ஃபிகா (போர்ச்சுகல்)

பென்ஃபிகா (போர்ச்சுகல்), இன்டர் மிலன் (இத்தாலி), ரெட் புல் சால்ஸ்பெர்க் (ஆஸ்திரியா), ரியல் சோசிடாட் (ஸ்பெய்ன்) இந்த சீசனின் கடினமான குரூப்களுள் ஒன்று. பிரசித்திபெற்ற அணிகள் அதிகம் இல்லாவிட்டாலும் ஓரளவு சமபலம் வாய்ந்த அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருப்பதால், இது மிகவும் போட்டி நிறைந்த குரூப்பாக இருக்கப்போகிறது. கடந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் ரன்னர் அப் ஆன இன்டர் மிலன் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். இரண்டாவது இடத்துக்கு எந்த அணி வேண்டுமானாலும் போட்டியிடலாம். அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: இன்டர் மிலன், பென்ஃபிகா

குரூப் E அணிகள்:

அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெய்ன்)
அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெய்ன்)

ஃபேயனூர்ட் (நெதர்லாந்து), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெய்ன்), லாசியோ (இத்தாலி), செல்டிக் (ஸ்காட்லாந்து) இதுவும் கிட்டத்தட்ட முந்தைய குரூப்பைப் போலத்தான். அத்லெடிகோ மாட்ரிட் எப்படியும் முதலிடம் பிடித்து முன்னேறிவிடும். மற்ற 3 அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். குறிப்பாக ஃபெயனூர்ட், லாசியோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: அத்லெடிகோ மாட்ரிட், லாசியோ

குரூப் F அணிகள்:

பாரிஸ் செய்ன்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), பொருஷியா டார்ட்மண்ட் (ஜெர்மனி), ஏசி மிலன் (இத்தாலி), நியூகாசில் யுனைடட் (இங்கிலாந்து) குரூப் ஆஃப் டெத். இந்தத் தொடரின் மிக மிக கடினமான குரூப் இதுதான்! வழக்கமாக மூன்று பெரிய அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றாலே அது குரூப் ஆஃப் டெத் எனப்படும். இங்கே 4 பெரிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. முந்தைய சீசனைப் போல் இருந்திருந்தால் பிஎஸ்ஜி எப்படியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்று சொல்லலாம். ஆனால் இப்போது எதையுமே சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சில அதிர்ச்சிகள் இந்த குரூப்பில் காத்திருக்கின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: நியூகாசில் யுனைடட், ஏசி மிலன்

குரூப் G அணிகள்:

மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), ரெட் புல் லெய்ப்சிக் (ஜெர்மனி), ரெட் ஸ்டார் பெல்கிரேட் (செர்பியா), யங் பாய்ஸ் (ஸ்விட்சர்லாந்து) நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி மிகவும் எளிதான குரூப்பில் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் 6 போட்டியிலுமே வென்றாலும் அதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. ரெட் புல் லெய்ப்சிக் அணிக்கு சிட்டியைத் தவிர வேறு எந்த தடையும் இருக்கப்போவதில்லை. அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: மான்செஸ்டர் சிட்டி, ரெட் புல் லெய்ப்சிக்

குரூப் H அணிகள்:

பார்சிலோனா (ஸ்பெய்ன்)
பார்சிலோனா (ஸ்பெய்ன்)

பார்சிலோனா (ஸ்பெய்ன்), போர்டோ (போர்ச்சுகல்), ஷக்தர் டொனட்ஷ்க் (உக்ரைன்), ராயல் ஆன்ட்வெர்ப் (பெல்ஜியம்) ஸ்பெய்ன் சாம்பியன் பார்சிலோனாவுக்கு இந்தப் பிரிவு ஓரளவு எளிதாகவே அமைந்திருக்கிறது. லா லிகாவில் அந்த அணி சற்று தடுமாறிக் கொண்டிருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் தொடங்குவதற்குள் அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். போர்டோ, ஷக்தார் அணிகளுக்கு நல்ல போட்டி இருக்கும். அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அணிகள்: பார்சிலோனா, போர்டோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com