\
messi - ronaldo
messi - ronaldometa ai

இணையத்தை போர்க்களம் ஆக்கிய 'MESSI'.. கொந்தளிக்கும் RONALDO ரசிகர்கள்!

மெஸ்ஸி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் வீடியோவால் இணையத்தில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய பிராண்ட் விளம்பர வீடியோவில், 21 ஆண்டுகால சாதனைகளை ‘பில்’ போல பட்டியலிட்டு, இறுதியில் ‘GOAT Debate Settled’ என முடித்து தன்னை எக்காலத்திற்கும் சிறந்த வீரர் என மறைமுகமாக அறிவித்த மெஸ்ஸி, ரொனால்டோ ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளார்; மெஸ்ஸி தலைக்கனம், insecure என குற்றம்சாட்டி இணையத்தில் கடும் வாதப்போரில் ஈடுபட்டுள்ளனர்.

எக்காலத்திற்கும் சிறந்த வீரர் மெஸ்ஸியா? ரொனால்டோவா? என்ற விவாதம் இரண்டு வீரர்களின் ரசிகர்களிடையே அவ்வப்போது உருவாவது வழக்கம். அப்போதெல்லாம் இரண்டுபேரின் தனிப்பட்ட சாதனைகளை முன்வைத்து இணையத்தில் ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது தன்னைத்தானே ‘எக்காலத்திற்குமான சிறந்த வீரர்’ என்று மெஸ்ஸி கூறியிருப்பது இரண்டு ரசிகர்களின் இடையே போராக வெடித்துள்ளது.

messi - ronaldo
messi - ronaldoweb

மெஸ்ஸியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவை பார்த்த ரொனால்டோ ரசிகர்கள், மெஸ்ஸி ஒரு தலைக்கனம் பிடித்தவர் என்றும், insecure person என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு ’உங்களால் மெஸ்ஸியை குறைகூற முடியுமே தவிர, அவர் சொல்வது பொய் என்று கூற முடியாது; ஏனென்றால் அவர் தான் ரியல் GOAT’ என மெஸ்ஸியின் ரசிகர்களும் கருத்துமோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த லியோனல் மெஸ்ஸி, அவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். மெஸ்ஸியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் புதிய பிராண்ட் விளம்பர வீடியோ ஒன்றில், பார் ஊழியர் ஒருவர் பில் போடுவது போன்று வீடியோ தொடங்குகிறது. அந்த பில்லில் 21 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையில் மெஸ்ஸி படைத்த முக்கியமான சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன.

அர்ஜென்டினா அணிக்காக அவர் அடித்த 125 கோல்களும், 2022 கால்பந்து உலகக்கோப்பை, 2 முறை வென்ற கோபா அமெரிக்கா பட்டங்கள் என நீளும் அந்தப்பட்டியலில், இறுதியாக ‘GOAT Debate Settled' என முடிகிறது. அதாவது எக்காலத்திற்கும் சிறந்த வீரர் மெஸ்ஸி தான், அந்த விவாதம் இனி இல்லை, முடித்துவைக்கப்பட்டது என்று அந்த வீடியோ உணர்த்துகிறது. இதைப்பார்த்த ரொனால்டோ ரசிகர்கள் ‘எப்போதும் ரொனால்டோ தான் ரியல் GOAT என்றும், ஒருமுறை ரொனால்டோ அணிக்கு எதிராக 0-6 என மெஸ்ஸி தோற்றபிறகு தன்னுடைய புரொஃபைல் புகைப்படத்தை உலகக்கோப்பையுடன் இருப்பது போல மாற்றினார், தற்போது தனக்குத்தானே GOAT பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ளார், அவர் எப்போதும் ரொனால்டோ உடன் ஒப்பிடுகையில் INSECUREஆகவே இருந்துவருகிறார் என்றும் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். மெஸ்ஸியின் ரசிகர்களும் அதற்கு சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். இணையப்போராகவே இது வெடித்துள்ளது.

இதற்கு முன் ஒருமுறை உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள் யார் என்ற கேள்வி மெஸ்ஸியிடம் கேட்கப்பட்டபோது, நெய்மர், எம்பாப்பே, லூயிஸ் சுவாரஸ் மற்றும் ஈடன் ஹசார்ட் போன்றவர்களின் பெயரை குறிப்பிட்ட மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயரை குறிப்பிடவில்லை. அப்போது ‘நான் ரொனால்டோவை அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. ஏனென்றால், அவரும் நானும் ஒரே லெவலில் தான் இருக்கிறோம். அவருக்கு எதிராக விளையாடியது மிகவும் மகிழ்ச்சி’ என்று கூறியிருந்தார். அதைப்பார்த்த பொதுவான கால்பந்து ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியிருந்த நிலையில், தற்போது மெஸ்ஸியின் வீடியோவிற்கு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com