\
rodrigo hernandez play for barcelona
rodrigo hernandez play for barcelonarodrigo

ரூ.710 கோடிக்கு ஒப்பந்தம்.. பார்சிலோனா செல்கிறார் கோல்டன் பால் வென்ற ‘ரோட்ரி’!

கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணியை திறமையாக வழிநடத்தி 2வது கோப்பைக்கு அழைத்துச்சென்ற கேப்டன் ’ரோட்ரி’ மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து பார்சிலோனா அணிக்கு செல்லவிருக்கிறார்.
Published on: 
Summary

2026 உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயினுக்கு 16 ஆண்டுகள் பின் கோப்பை வெற்றி, கோல்டன் பால் உட்பட பல விருதுகள் கைப்பற்றிய கேப்டன் ரோட்ரிக், மான்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார். 12 முக்கிய பட்டங்கள் வென்ற நடுக்கள வீரரான அவர், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.710 கோடி ஒப்பந்தத்தில் பார்சிலோனாவுக்கு செல்ல, அந்த அணிக்காக விளையாடுவது தனது கனவு என தெரிவித்துள்ளார்.

2026 கால்பந்து உலகக்கோப்பையில் நெருப்பாக விளையாடிய ரோட்ரிக் தலைமையிலான ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டியில் ஜாம்பவான் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை 1-0 என தோற்கடித்து 16 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தட்டிச்சென்றது. கடைசியாக 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றிருந்த அந்த அணி 2026ஆம் அண்டு 2வது கோப்பையை முத்தமிட்டது. கோல்டன் பால், கோல்டன் கிளவ், இளம் வீரருக்கான விருது என 3 விருதுகளை வென்ற ஸ்பெயின் 2026 உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தியது.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டின் பலோன் டி'ஓர் விருதையும், 2026 உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதையும் வென்ற ஸ்பெயின் கேப்டனும் நடுக்கள வீரருமான ரோட்ரிக், தன்னுடைய அற்புதமான உலகக்கோப்பை பயணத்துக்கு பிறகு தன்னுடைய கிளப் அணியான மான்செஸ்டர் சிட்டியிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார்.

2019-ல் அட்லெடிகோ மாட்ரிட்டிலிருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு சாதனை ஒப்பந்தமான 6.28 மில்லியனுக்கு மான்செஸ்டர் சிட்டிக்கு வந்த ரோட்ரிக், கோப்பைகள் நிறந்த 7 சீசன்கள் 298 போட்டிகளுக்கு பிறகு அவ்வணியிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார்.

ரோட்ரிக்காக 800 கோடிவரை தர தயாராக இருந்த பார்சிலோனா அணி நீண்ட பேச்சுவார்த்தைக்குபிறகு 710 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒப்பந்தம் கையெழுத்திடப்படவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், மான்செஸ்டர் சிட்டியிலிருந்து பார்சிலோனாவுக்கு மாறும் தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக ஸ்பெயின் நடுக்கள வீரர் ரோட்ரி பார்சிலோனா சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பார்சிலோனா அணிக்காக விளையாடுவது தனது "கனவு" என்று கூறினார்.

ரோட்ரிக் தன்னுடைய கிளப் கால்பந்து வாழ்க்கையில் இதுவரை நான்கு பிரீமியர் லீக் பட்டங்கள், இரண்டு FA கோப்பைகள், மூன்று EFL கோப்பைகள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் உட்பட மொத்தமாக 12 முக்கிய பட்டங்களை வென்றுள்ளார்.

rodrigo hernandez play for barcelona
இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தி.. 2 மாதத்தில் இந்தியா வரும் பிரேசில் அணி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com