\
Cristiano Ronaldo Temporarily Suspended by Portugal FA
கிறிஸ்டியானோ ரொனால்டோREUTERS

போர்ச்சுக்கல் பயிற்சியாளருடன் மோதல்? ரொனால்டோ சஸ்பெண்ட்!

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு அவரைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் இடையேயான UEFA நேஷன்ஸ் லீக் போட்டி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்றது. ஆனால், இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ அந்த அணியின் முகாமில் இருந்து வெளியேறினார். போர்ச்சுகல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் (Jorge Jesus) ரொனால்டோவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும், பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியது தொடர்பாக, போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோReuters

விசாரணை முடியும் வரை ரொனால்டோ தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து ரொனால்டோ வெறியிட்டுள்ள அறிக்கையில், ”பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் இந்தத் தொடர் குறித்து ஒரு திட்டத்தை வகுத்திருந்தார். அதன்படி, நார்வே போட்டியில் நான் விளையாடப்போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், போட்டி நடைபெறும் நாளான செப்டம்பர் 27-ம் மதிய உணவின் போது என்னை 30 நிமிடங்கள் விளையாடக் கூறினார்.

ஆனால், warm-up மேற்கொண்ட பிறகும் விளையாட வைக்கப்படவில்லை. தேசிய அணிப் பயிற்சியாளர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. அதோடு உண்மையைச் சொல்லி விவகாரத்தை முடித்து வைப்பதாக ஜீசஸ் கூறினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தனக்கு விதிக்கப்படும் தண்டனையை நாட்டின் மீதான பற்றின் காரணமாக ஏற்றுக்கொள்வதாகவும், இடைநீக்கத்தை நிறைவு செய்த பின்னர் போர்ச்சுகல் அணிக்காகத் தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Cristiano Ronaldo Temporarily Suspended by Portugal FA
190 ரன்கள்.. 24 ஆண்டுகளுக்கு பின்.. தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆஸ்திரேலியா வீரர் ரென்ஷா சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com