இனவெறி தாக்குதலுக்கு ஆளான கால்பந்தாட்ட வீரர் நெய்மர்..!
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர்.
பிரான்சில் நடைபெற்று வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் தொடரில் PARIS SAINT-GERMAIN (PSG) அணிக்காக விளையாடி வருகிறார்.
MARSEILLE அணியுடனான போட்டியின் போது தானே இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார் நெய்மர்.
‘என்னை அந்த அணியின் வீரர் ALVARO GONZALEZ குரங்கு என திட்டினார்’ என்று நெய்மர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் நெய்மரின் அணி 0-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
ஆட்டம் முடிவதற்கு முன்னர் MARSEILLE அணியின் வீரர் ALVARO GONZALEZ தலையில் நெய்மர் அடித்தமைக்காக நடுவரால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
நெய்மர் லைனில் நின்று கொண்டிருந்த நான்காவது நடுவரிடம் ‘அவன் என்னை இன ரீதியாக சாடியதால் நான் அப்படி செய்தேன்’ என விளக்கம் கொடுத்துவிட்டு சொல்கிறார்.
இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.