பயிற்சிக்கு சொகுசு காரில் கூலாக வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

பயிற்சிக்கு சொகுசு காரில் கூலாக வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
பயிற்சிக்கு சொகுசு காரில் கூலாக வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்தாட்ட விளையாட்டு உலகில் அதிக கோல்களை வலைக்குள் தள்ளிய வீரர்களில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு முதலிடம். அதே போல உலக அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற முதல் தனி நபரும் அவர்தான். இந்நிலையில் அவர் அண்மையில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட பயிற்சிக்கு சொகுசு காரில் கூலாக வந்துள்ளார். அந்த படம் தற்போது வெளியாகியுள்ளது. 

அவர் வந்த சொகுசு கார் ஆஸ்டன் மார்டின் DBS Superleggera என தெரியவந்துள்ளது. கடந்த 2018-இல் சந்தையில் முதன்முதலில் இந்த காரின் விற்பனையை ஆஸ்டன் மார்டின் நிறுவனம் தொடங்கியது. களத்தில் அவரது ஆட்டத்திற்காக பரவலாக அறியப்படுபவர் ரொனால்டோ. அதே போலவே அவரது செயல்கள் சில களத்திற்கு வெளியிலும் அவரை அறிய செய்கிறது. அண்மையில் கூட தனது காதலியின் பிறந்த நாளன்று புர்ஜ் கலீஃபாவில் அவரது பெயரை ஒளிரச் செய்தார். தற்போது இந்த கார் மூலம் பரவலாக பேசப்பட்டு வருகிறார். இந்த காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி என தெரிகிறது. 

லம்போர்கினி அவென்டேடார், பென்ட்லி ஜிடி ஸ்பீட், ஆஸ்டன் மார்ட்டின் டிபி9, ஆடி ஆர்8, ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் மற்றும் ஃபெராரி 599 ஜிடிஓ போன்ற விலை உயர்ந்த கார்களை ரொனால்டோ வைத்துள்ளார். அதே போல உலகின் விலை உயர்ந்த காரான Bugatti La Voiture Noire காரையும் அவர் வைத்துள்ளார். இதய விலை ரூ.75 கோடி ஆகும். 

இருந்தாலும் நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரொனால்டோ விளையாடி வந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி ரவுண்ட் ஆப் 16 தொடருடன் வெளியேறியுள்ளது. Atletico அணி ரொனால்டோவின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com