பீலே
பீலேpt web

கால்பந்து உலகின் ஜாம்பவான்.. ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பீலே

கால்பந்து உலகில் தனக்கென தனிஇடம் பிடித்த பீலேவுக்கு 84-ஆவது பிறந்தநாள் இன்று. மறைந்தாலும் கால்பந்து ரசிகர்களின் மனதில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பீலே பற்றிய சிறு நினைவூட்டலை தற்போது காணலாம்.
Published on

ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கொண்டாடும் இளைய தலைமுறைகள் பலரும் அறியாத கால்பந்து ஜாம்பவன்... கால்பந்து விளையாட்டை அறிந்தவர்களால் தவிர்க்க முடியாத பெயர் பீலே...

பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான் பீலே. 1960, 70ஆம் ஆண்டுகாலத்தில் எதிரணி வீரர்களுக்கு களத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். மூன்று முறை உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். இப்படி பல சாதனைகளுக்கு உரியவரான பீலே, உலக அமைதிக்கான சர்வதேச விருதையும் பெற்றிருக்கிறார்... 22 ஆண்டு கால கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் ஆயிரத்துக்குத் அதிகமான கோல்களையும் அடித்துள்ளார்.

பீலே
கூட்டணிக் கவிதை சொன்ன இபிஎஸ்.. ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என விமர்சனம்

ஃபிஃபா உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்று கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம் பெற்றிருக்கிறார். 16 ஆவது வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971-ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பீலே இருந்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com