குத்துச்சண்டையில் களமிறங்கும் கால்பந்து வீரர்

குத்துச்சண்டையில் களமிறங்கும் கால்பந்து வீரர்

குத்துச்சண்டையில் களமிறங்கும் கால்பந்து வீரர்
Published on

இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ரியோ ஃபெர்னினன்ட் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். 

இங்கிலாந்து நாட்டின் கால்பந்து வீரர் ரியோ ஃபெர்னினன்ட். 38 வயதாகும் இவர் இங்கிலாந்து அணிக்காக 81 போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரியவர். அத்துடன் புகழ்பெற்ற மேன்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காகவும் 300 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவரது மனைவி இரண்டாண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தற்போது தனது மூன்று குழந்தைகளுடன் ரியோ வசித்து வருகிறது.

இந்நிலையில் வர்த்தக ரீதியிலான குத்துச்சண்டை போட்டிகளில் ‌கலந்து கொள்ள ரியோ முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். கால்பந்து வீரர் ஒருவர் குத்துச்சண்டையில் பங்கேற்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com