ஐபிஎல்: ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றப் போவது யார்? - யாருக்கு வாய்ப்பு அதிகம் ?
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து, ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்ற வாய்ப்புள்ள வீரர்களை குறித்து விவாதிக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
அரபு அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான அட்டவணையும் நேற்று வெளியிடப்பட்டது. அதன் படி முதல் ஆட்டத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதிக்கொள்கின்றன. இந்நிலையில் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் யார் அதிக ரன்களை குவித்து, அதற்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பியைக் கைப்பற்றுவார் என்று கேள்வி சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
காரணம் ஐபிஎல் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கானது. குறைந்த பால்களில் அதிக ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் போட்டிப்போட்டிக்கொண்டு பந்துகளை துவம்சம் செய்வர். அதனால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.
ஆனால் அரபு நாட்டில் அமைந்துள்ள மைதானம் ஸ்பின்னர்களுக்கானது எனச் சொல்லப்படுகிறது. இதனால் இம்முறை ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றுவதில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவால் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்ற வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அட்டவணைப்படுத்தியுள்ளது.
1. டேவிட் வார்னர்
ஹைதாராபாத் சன் ரைஸஸ் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் இவ்வகையான மைதானத்தில் விளையாடுவதில் வல்லவர் எனச் சொல்லப்படுகிறது. அவரது பவர் ஷாட்கள்கள் மற்றும் கூர்மையாக விளையாடும் திறன் நிச்சயம் இந்த ஐபிஎல் போட்டிகளில் எடுபடும் எனப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வார்னர் 694 விளாசிய ஆரஞ்சு நிறத் தொப்பியைக் கைப்பற்றினார். ஆகையால் இவ்வாண்டும் ஆரஞ்சு நிறத் தொப்பியை வார்னர் கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2. விராட் கோலி
இந்திய அணியின் ரன் மிஷின் என அழைக்கப்படும் விராட் கோலிக்கும் ஆரஞ்சு நிறத் தொப்பியைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் விராட் ஊரடங்கு நாட்களில், பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை முறுக்கேற்றி வைத்திருக்கிறார். கடந்த 5 மாதங்களாக அவர் கிரிக்கெட் விளையாடததால் அரபு அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் தன்னை நிருப்பித்து கொள்ள ஆக்ரோஷமாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஆரோன் பிஞ்ச்
பெங்களூர் அணிக்காக விளையாடும் ஆரோன் பிஞ்சு தொப்பியை கைப்பற்றுவதற்கான போட்டியில் இருக்கிறார். அணியின் ஓபனராக களம் காணும் ஆரோன் பிஞ்ச் பவர் ஷ்ரைக், குறைந்த ஓவர் கொண்ட போட்டிகளில் நீண்ட நேரம் நின்று விளையாடுவது போன்றவற்றில் பலம் பொருந்தியவராக பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து பெங்களூர் அணியில் ஏபி வில்லியர்ஸ், பர்தீவ் பட்டேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கிறது.
4. சுப்மான் கில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓபனராக களம் இறங்கும் ராபின் உத்தப்பா மற்றும் கிறிஸ் லின் வரிசையில் சுப்மான் கில்லும் வாய்ப்பு இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லமும் அணியின் பெரிய பலமாக சுப்மான் கில் கூறியுள்ளார். சுப்மான் கில் ஓபனாரக களம் இறங்கும் பட்சத்தில் எதிரணிக்கு கடுமையான போட்டியாளராகவும், அதிக ரன்கள் குவிக்கும் வீரராகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
5. கே.எல் ராகுல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுலுக்கும் வாய்ப்பு இருக்கிறது, காரணம் கடந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியில் சில ரன்கள் வித்தியாசத்திலேயே ஆரஞ்சு நிறத் தொப்பி அவரின் கை நழுவிச் சென்றது. அதனால் அவரும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள நிச்சயம் போராடுவார்.
அவரது விக்கெட் கீப்பிங் ஸ்டைல் சரிவர இருப்பதால், இந்திய அணியில் தோனியின் இடம் அவருக்குச் செல்லவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
courtesy:https://www.hindustantimes.com/cricket/ipl-2020-five-batsmen-who-are-strong-contenders-to-win-orange-cap-in-uae/story-qLmFhCBk2mn2gJDpJhnM7L.html