இந்தியா -தென்னாப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா -தென்னாப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா -தென்னாப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்ரிக்காவில் அந்நாட்டு அணியுடன் இதற்கு முன் 6 முறை டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ள இந்திய அணி 5ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு முறை சமன் செய்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி புதிய சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள்  உள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com