விளையாட்டு
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் திணரும் ஆஸி அணி
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் திணரும் ஆஸி அணி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்களை இழந்து போராடுகிறது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் தமீம் இக்பால் 71 ரன்களும், ஷகீப் அல் ஹசன் 84 ரன்களும் எடுத்தனர். பேட் கம்மின்ஸ், நாதன் லியோன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.