வெற்றிக்கணக்குடன் தொடங்குமா இந்தியா?-தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று முதல் டி20 போட்டி

வெற்றிக்கணக்குடன் தொடங்குமா இந்தியா?-தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று முதல் டி20 போட்டி

வெற்றிக்கணக்குடன் தொடங்குமா இந்தியா?-தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று முதல் டி20 போட்டி
Published on

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். ஆனால் பந்துவீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. உலகக்கோப்பை முன்பாக பந்துவீச்சில் தயாராக இந்த தொடர் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங், பந்துவீச்சில் பலமாக உள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எனவும் கருதப்படுகிறது. குறிப்பாக பேட்டிங்கில் ஹென்ட்ரிக்ஸ், கிளாஸன், குவின்டன் டி காக், லுங்கி நிகிடி, ஷம்ஸி, ரபாடா சிறப்பான பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘டி20 உலககோப்பையில் இவர்தான் டேஞ்சரான பிளேயர்’-சூர்யகுமார் பேட்டிங்கை வியக்கும் சீனியர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com