மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் நடைபெற இருக்கும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்ரிக்க அணி. இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் இந்தப்போட்டி தொடங்குகிறது. லீக் சுற்றில் இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது. அதன்பின்னர் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது.
இதேபோல் 20ஆம் தேதி டெர்பியில் இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. 6 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியன் அணி 2வது இடத்திலும் 5 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 3வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
இந்தப்போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளை பொறுத்திருந்து பார்ப்போம்.